இன்று மஹாளய அமாவாசை… தர்ப்பணம் கொடுக்க தடை.. கோவில்கள் மற்றும் நீர்நிலைகளில் கண்காணிப்பு தீவிரம்..!!

இன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்சி அம்மா மண்டபம், குமரிக்கடல் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஆடி, தை அமாவாசை நாட்களிலும், புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களிலும் பொதுமக்கள் நீர்நிலைகளில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். நாளை புரட்டாசி அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. இதுவரை திதி கொடுக்க மறந்தவர்கள் விரதமிருந்து மகாளய அமாவாசையன்று திதி கொடுப்பது நன்று என்பது ஐதீகம். புரட்டாசி ஒன்றாம் தேதி பிறகும் அதே நாளில் மகாளய அமாவாசை வருவது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.கொரோனா காரணமாக நீர் நிலைகளில் நீராட தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி புகழ்பெற்ற திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு வரவேண்டாம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, தில்லைநாயகம் படித்துறை உள்ளிட்ட படித்துறைகள் மூடப்பட்டுள்ளதாக திருச்சி காவல்துறை அறிவித்துள்ளது. ஆகையால் பொதுமக்கள் ஊரடங்கி கடைபிடித்து ஒத்துழைக்குமாறும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கடற்கரை வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு வருவதை தடுக்க கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *