வரலாற்றில் இன்று ஜனவரி 14…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 14

கிரிகோரியன் ஆண்டு : 14_ ஆம் நாளாகும்

நெட்டாண்டு : 352_ ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு : 351_ நாட்கள் உள்ளன

 

இன்றைய தின நிகழ்வுகள்:

1236 – இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி புரோவென்சு இளவரசி எலனோரைத் திருமணம் செய்தார்.

1301 – அங்கேரி மன்னர் மூன்றாம் அன்ட்ரூ இறந்தார்.

1539 – எசுப்பானியா கியூபாவை இணைத்துக் கொண்டது.

1690 – கிளாரினெட் இசைக்கருவி செருமனியில் வடிவமைக்கப்பட்டது.

1724 – எசுப்பானிய மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான்.

1761 – இந்தியாவில் மூன்றாம் பானிபட் போர் அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

1784 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா பெரிய பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

1814 – கீல் உடன்பாடு: நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.

1858 – பிரான்சு மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.

1907 – ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

1913 – கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர்.

1932 – தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபை சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.

1950 – சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1953 – யோசிப் டீட்டோ யுகோசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

1969 – அவாயிற்கு அருகில் எண்டர்பிரைசு என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் தற்செயலாக இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

1972 – டென்மார்க் அரசியாக இரண்டாம் மார்கிரெத் முடிசூடினார். 1412 இற்குப் பின்னர் முடிசூடும் முதலாவது டென்மார்க் மகாராணி இவராவார்.

1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1993 – போலந்தில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 55 பேர் உயிரிழந்தனர்.

1994 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.

1995 – சந்திரிகா அரசு – விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

1996 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் டொராண்டோ நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1998 – ஆப்கானித்தானின் சரக்கு விமானம் ஒன்று பாக்கித்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.

2000 – 1993 இல் நூற்றுக்கும் அதிகமான பொசுனிய முசுலிம்களைப் படுகொலை செய்தமைக்காக ஐந்து பொசுனிய பொசுனிய குரொவாசியர்களுக்கு ஐக்கிய நாடுகள் அவை 25 ஆன்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

2005 – சனிக் கோளின் டைட்டான் நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.

2011 – துனீசியப் புரட்சி: தூனிசியாவின் அரசுத்தலைவர் பென் அலி சவூதி அரேபியாவிற்குத் தப்பி ஓடினார். அரேபிய வசந்தம் ஆரம்பமானது.

2015 – திருத்தந்தை பிரான்சிசு யோசப் வாசு அடிகளை கொழும்பில் புனிதராகத் திருநிலைப்படுத்தினார்.

இன்றைய தின பிறப்புகள்:

1551 – அபுல் ஃபசல், பேரரசர் அக்பரின் ஆலோசகர் (இ. 1602)

1741 – பெனடிக்ட் ஆர்னோல்டு, அமெரிக்க-பிரித்தானிய இராணுவத் தளபதி (இ. 1801)

1866 – ஜார்ஜ் குர்ச்சீயெவ், ஆர்மீனிய ஆன்மீகவாதி (இ. 1949)

1875 – ஆல்பர்ட் சுவைட்சர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-காபோனிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1965)

1887 – கோ. நடேசய்யர், இலங்கை மலையகத் தமிழறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, இதழாசிரியர், எழுத்தாளர் (இ. 1947)

1915 – ஹொன்னப்ப பாகதவர், தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகர், பாடகர், இசை அமைப்பாளர், இயக்குநர் (இ. 1992)

1917 – க. வெள்ளைவாரணனார், தமிழகத் தமிழறிஞர், தமிழிசை அறிஞர் (இ. 1988)

1918 – கே. முத்தையா, தமிழக விடுதலைப் போராட்ட வீரர், இடதுசாரி, எழுத்தாளர் (இ. 2003)

1920 – ஆர். கே. ஸ்ரீகண்டன், தென்னிந்தியக் கருநாடக இசைப் பாடகர் (இ. 2014)

1926 – மகாசுவேதா தேவி, வங்காள எழுத்தாளர் (இ. 2016)

1934 – நா. சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2006)

1936 – ம. பார்வதிநாதசிவம், ஈழத்துப் புலவர், பத்திரிகையாளர் (இ. 2013)

1937 – சோபன் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2008)

1938 – டி. செல்வராஜ், தமிழக எழுத்தாளர் (இ. 2019)

1943 – ரால்ஃப் ஸ்டைன்மன், கனடிய நோய்த்தடுப்பாற்றல் மருத்துவர், உயிரியலாளர் (இ. 2011)

1946 – க. அருணாசலம், ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)

1950 – ச. முருகானந்தன், இலங்கை எழுத்தாளர், மருத்துவர்

1950 – ராமபத்ராச்சார்யா, இந்திய மதகுரு

1951 – ஓ. பன்னீர்செல்வம், தமிழக அரசியல்வாதி, அரசியல்வாதி

1960 – ஜெ. வீரநாதன், தமிழக எழுத்தாளர்

1960 – சு. கமலா, மலேசிய எழுத்தாளர்

1963 – இசுட்டீவன் சோடர்பர்க், அமெரிக்க இயக்குநர்

1965 – ஷமீல் பசாயெவ், செச்சினியப் போராளி (இ. 2006)

1967 – எமிலி வாட்சன், ஆங்கிலேய நடிகை

இன்றைய தின இறப்புகள்:

1742 – எட்மண்டு ஏலி, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1656)

1752 – தேவசகாயம் பிள்ளை , இந்தியக் கத்தோலிக்க அருளாளர் (பி. 1712)

1753 – ஜியார்ஜ் பெர்க்லி, ஆங்கிலேய-ஐரிய மெய்யியலாளர் (பி. 1685)

1867 – ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ், பிரான்சிய ஓவியர் (பி. 1780)

1892 – அப்துல்லா இப்னு உமர் பாதீப் அல்யமானி, யெமனிய-இலங்கை இசுலாமிய சூபி அறிஞர் (பி. 1825)

1898 – லூயிஸ் கரோல், ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர், கணிதவியலாளர் (பி. 1832)

1901 – ஹெர்மைட், பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1822)

1937 – ஜெய்சங்கர் பிரசாத், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1889)

1957 – ஹம்பிறி போகார்ட், அமெரிக்க நடிகர் (பி. 1899)

1962 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, இந்தியப் பொறியியலாளர், அரசியல்வாதி (பி. 1860)

1976 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் 2வது பிரதமர் (பி. 1922)

1978 – கியேடல், ஆத்திரிய-அமெரிக்க கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1906)

2000 – எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (பி. 1920)

2016 – அலன் ரிக்மான், ஆங்கிலேய நடிகர் (பி. 1946)

2017 – சூ யூக்வாங், சீன சமூகவியலாளர் (பி. 1906)

2017 – சுர்சித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி (பி. 1925)

இன்றைய தின சிறப்பு நாள்:

தாய்நாட்டைக் காத்தவர்களுக்கான நாள் (உசுபெக்கிசுத்தான்)

புரட்சி மற்றும் இளைஞர் நாள் (தூனிசியா)

தைப்பொங்கல் (சனவரி 14 அல்லது சனவரி 15)

மகி (பஞ்சாப் (இந்தியா), அரியானா, இமாச்சலப் பிரதேசம்)

மகர சங்கராந்தி (இந்தியா), நேபாளம்)

உத்தராயணம் (உத்தராகண்டம், குசராத்து, இராசத்தான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *