தொடர்ந்து மூன்று டி 20போட்டிகளில் … வங்காளதேசத்தை தோற்கடித்து …நியூசிலாந்து அபார வெற்றி …!!!

வங்காளதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து விளையாடிய ,3 ஒருநாள் போட்டித் தொடரிலும்  நியூசிலாந்து அணி  வெற்றி பெற்றது.

ஆக்லாந்தில் நடைபெற்ற  வங்காளதேசம் -நியூசிலாந்து அணிகளுக்கிடையே, கடைசி மற்றும் 3-வது 20 ஓவர்க்கான போட்டி நேற்று  நடந்தது. ஆட்டத்தில் திடீரென்று மழையின் காரணமாக ,20 ஓவரில்  பாதியாக 10 ஓவர்கள் குறைக்கப்பட்டது. இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கில்  களமிறங்கியது. இதில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியில் தொடக்க வீரரான மார்ட்டின் கப்தில் 44 ரன்கள், அதன்பின் களமிறங்கிய ஆலகன் 71 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இவர் 3 சிக்சர் மற்றும் 10 பவுண்டரிகளை அடித்து விளாசினார். அதன்பின் களமிறங்கிய வங்காளதேச அணி 142 எடுத்தால் வெற்றி ,என்ற இலக்குடன் விளையாடியது. ஆனால் வங்காளதேச வீரர்களால் , பவுலிங் செய்த நியூசிலாந்து அணியின்  பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க  முடியவில்லை. இதனால் வங்காளதேச அணி 9.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு , 76 ரன்கள் எடுத்துதோல்வியை சந்தித்தது .எனவே நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில், வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.