இதோட மதிப்பு 24 லட்சமா….!! வசமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!!

குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்ட் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாமரை தாங்கல் என்ற பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர்.

அதில் குடோன் மற்றும் வாகனங்களில் ரூபாய் 24 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் ரூபாய் 5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள், 2 கனரக லாரிகள், மினி லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து குட்கா பதுக்கி வைத்திருந்தவர்கள் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் பழனிவேல் மற்றும் சசிகுமார் ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *