குட்கா கடத்தல் வழக்கு…. கையும் களவுமாக சிக்கிய இருவர்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!

குட்கா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

வேலூரில் ஜாபர்கான் என்பவரும்,  ராணிப்பேட்டையில் பாஷா என்பவர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .

இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி 2 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கும் படி கலெக்டர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அதற்கான நகலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் 2 பேரிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *