“நடைபெற்ற தீவிர வாகன சோதனை” கையும் களவுமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!!

ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு காரில் குட்கா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுங்க சாவடிகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சரியாக பதில் அளிக்காத காரணத்தினால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் காரின் பின்பக்க கதவை திறந்து மூட்டைகளில் குட்கா இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ராணிப் பேட்டையை சேர்ந்த அப்சல் பாஷா, ஜாபர் கான் ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து காரில் கடத்தி வந்த 278 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதன் மதிப்பு ரூபாய் 2 லட்சம் இருக்கும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *