நடைபெற்ற தீவிர சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!!

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்வதாகவும், அதனால் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. எனவே காவல்துறையினர் சிப்காட் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அதில் ஒரு வீட்டில் சோதனை செய்த போது சுமார் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்தவரைப் பற்றி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த ராஜேஷ் ரிஸ்கா என்பது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *