புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் ஆலங்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் கடைகளில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது உறுதியானது.
பின்னர் கடையில் வைத்து விற்பனை செய்தவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தங்கப்பாண்டியன், கனி, அப்துல் ரகுமான், ராஜா ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்ததோடு கடைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 315 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.