குட்கா தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த 2006ஆம் ஆண்டு  இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா – பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை ஆனையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை அடுத்து ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பானைகள் என்பது தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில்,  தடையை மீறி சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீதமாக அரசு நடவடிக்கையும் எடுத்து வந்தது. அரசின் இந்த உத்தரவு சிறு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்,  இதனை தடுக்க வேண்டும் என சொல்லி குட்கா போன்ற பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு என்பது தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு கடந்த 25ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்கள். அதில் உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்டப்பட்ட உணவு பாதுகாப்பு தர சட்டத்தில் புகையிலை பொருட்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அப்படி இருக்கும்போது உணவு பாதுகாப்பு துறை சார்பாக விதிக்கப்பட்ட இந்த தடை உத்தரவு என்பது சரியானது அல்ல. எனவே தடையை நீக்குவதாக அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதனை எதிர்த்து தான் தற்போது உச்ச நீதிமன்றத்தில்  தமிழ்நாடு அரசு சார்பாக மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கிறது. அதில் குட்கா –  பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களினால் அதிக ஆபத்து ஏற்படுவதக்கவும், இதனை அடிப்படையாகக் கொண்டுதான் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு இதற்க்கு  தடை விதித்ததாகவும், ஆகவே கண்டு கொள்ளாமல் சென்னை நீதிமன்றம் இந்த தடை ஆணையை ரத்து செய்திருப்பது சரியானது அல்ல. எனவே உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பாக கோரிக்கை என்பது வைக்கப்பட்டிருக்கிறது