கிடைத்த தகவல்…. சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்…. உரிமையாளருக்கு வலைவீச்சு….!!!

விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கந்தப்பா காலனி அமைந்துள்ளது. இங்கு புகையிலை பொருட்கள் விற்பனைக்காக  வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது உறுதியானது.

இதனையடுத்து குடோனுக்கு சொந்தமானவர் பற்றி நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசித்து வரும் மதன் என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடோனில் இருந்த ரூ 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மதனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *