என்னுடைய ஆதரவு யாருக்கு என்பது ஒரு வாரத்தில் அறிவிக்கப்படுமென்று முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , சி.பி.எம் , சிபிஐ , விசிக , மதிமுக , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , இந்திய ஜனநாயக கட்சி , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றனர். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பணிகளை மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளாக கோவை , மதுரை அறிவிக்கப்பட்டு அக்கட்சி சார்பில் வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் இன்று காலை மு.க அழகிரியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி தெரிவிக்கயில் , மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு வெங்கடேசன் என்ன சந்திப்பதில் எந்த தவறும் இல்லை என்றார் . மேலும் அவர் தெரிவிக்கையில் மக்களவைத் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஒரு வாரத்தில் தெரிவிப்பேன் என்று முக.அழகிரி தெரிவித்துள்ளார்.