கும்பம் இராசிக்கு… “திடீர் அவசர முடிவு எடுக்க வேண்டியிருக்கும்”… பொறுமை மட்டும் இழந்து விடாதீர்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்களை செயலாக்க யாரேனும் ஒருவரின் ஒத்துழைப்பு உங்களுக்கு தேவைப்படும். அலைச்சல் கூடும். விரயங்கள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துவிட்டால் இன்றைய நாள் உங்களுடைய வசம் வந்துவிடும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள். இன்று திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூக நிலை நீடிக்கும். உல்லாசப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது. இன்று பொறுமை மட்டும் இழந்து விடாதீர்கள். இன்றைய  நாள் நீங்கள் கலகலப்பாகவே காணப்படுவீர்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே முடிந்தால் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *