சனிக்கிழமை இதை மட்டும் செய்தால் பணம் உங்களை தேடி வரும்…!!

வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் தீர பண வரவு அதிகரிக்க புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள செய்யவேண்டிய செயல்.

எப்படிப்பட்ட கடன் பிரச்சனையில் நீங்கள் சிக்கி இருந்தாலும், வீடுகளில் செல்வம் இருக்கவேண்டும் என நினைத்தாலும் இதனை செய்யலாம் இது நல்ல பலனை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது சித்தர் ஒருவர் கூறிய பரிகார முறை ஆகும். இதனை தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் மேலும் பணக்கஷ்டம் இருப்பவர்களும் செய்யலாம். முதலில் பச்சரிசியை எடுத்துக் கொள்ளவும் இதனை செய்வதற்கு உகந்த நாள் சனிக்கிழமை.

சனிக்கிழமை அன்று வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகரின் ஆலயத்திற்கு சென்று விநாயகரை மூன்று முறை வலம் வரவேண்டும். அவ்வாறு வலம் வந்து விநாயகரை மனமார வணங்கி நீங்கள் கொண்டு சென்ற அரிசியை விநாயகரின் ஆலயத்திற்கு அருகில் தூவிவிட வேண்டும். ஆலயத்தின் அருகே எறும்பு புற்று இருந்தால் எறும்பு புற்றில் போடலாம் எறும்பு புற்று இல்லை என்றால் சாதாரணமாக ஆலயத்தின் அருகில் இந்த அரசியை  போட்டுவிடவேண்டும் எறும்பு எடுத்துச் சென்று தனது கூட்டில் அரிசியை சேமித்து வைத்து மழை காலத்தில் சாப்பிடும்.

அரிசியை ஒரு எறும்பு சாப்பிட இரண்டரை வருடம் ஆகும். இது எதைக் குறிக்கிறது என்றால் ஜோதிட ரீதியாக கிரக நிலை மாற்றம் என்பது இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நிகழும். ஒரு எறும்பு ஒரு அரிசியை எடுத்துச் செல்கிறது என்றால் அந்த எறும்பு அந்த அரிசியை இரண்டரை வருடத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும். எனவே அந்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். மேலும் ஒரு எறும்பு ஒரு அரிசியை முழுதாக சாப்பிட்டால் 108 பிராமணர்களுக்கு உணவளித்த புண்ணியம் கிடைக்கும். அதேபோன்று போடும் அரிசியின் அளவு கிடைக்கும் புண்ணியமும் இருக்கும். சனி தோஷத்தால் அவதிப்படுபவர்கள் இதனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *