“நேருவின் வாக்குறுதியை காப்பாற்றுங்க ” வைரமுத்து வேண்டுகோள் ..!!

நேருவின் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசிற்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார் .

கல்விக் கொள்கையை முற்றிலுமாக தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய கொள்கைகளை கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்த பரிந்துரையை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பினர்  கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஹிந்தி பேசாத மக்கள் ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் வரை மொழித் திணிப்பை செய்யமாட்டோம் என்று நேரு வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆனால் தற்போது இருக்கக்கூடிய மத்திய அரசானது அதனை மீறும் வகையில் புதிய கல்விக் கொள்கை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது தற்போது இருக்கக்கூடிய மத்திய அரசுக்கு நேருவை பிடிக்குமோ பிடிக்காதோ அது எனக்கு தெரியாது ஆனால் நேருவின் வாக்குறுதியை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.