அண்ணாமலைக்கு லைக் போட… BJP-ல் ஒரு டீம் இருக்கு…! வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம் ..!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், மாநில தலைவராக எல்.முருகன் ஜி வரும் போது கூட அவருக்கு என்ன வேலையோ ? அதை நான் பண்ணி கொடுத்தேன். அதுக்கப்புறம் அண்ணாமலை ஜீ வந்தது பிறகு எனக்கான வேலையை  அப்புறமும் அதுக்கப்புறம் தொடர்ந்து நான் வேலைகள் செஞ்சிட்டு இருந்தேன். இல்லைனா எனக்கு மாநில போஸ்டிங் கொடுத்திருக்க மாட்டார் அவரு.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போடும் போஸ்ட்டுக்கு லைக் போட ஒரு டீம் இருக்குனு சொன்னது குறித்து காயத்ரி ரகுராமிடம் கேட்ட போது, வார் ரூம்ன்னு ஒன்னு இருக்குங்க. அதை மறுக்க முடியாது. அது எல்லா கட்சியிலும் இருக்கு. அந்த வார் ரூம்ல இருக்கவங்க,  தப்பான முறையில் அதை எடுத்துக்கிறார்களா ? அப்படிங்கறது தெரியல. சொந்தக் கட்சியினரே ட்ரோல் செய்ற அளவுக்கு ஏன் இவ்வளவு டக்குனு வக்கிரம் ஆயிட்டாங்கன்னு தெரியல ?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு என் மீது என்ன கோவம் என்று தெரில. அவங்க இன்னைக்கு காலையில அண்ணாமலை கேட்டது. ஏன் என்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கலைன்னு கேட்டாங்க. நான் கம்ப்ளைன்ட் ரெடி பண்றதுக்குள்ள…. அவரு என்ன சஸ்பெண்ட் பண்ணிட்டாரு, அதுதான் உண்மை. அதனால எனக்கு தெரியல.

நான் வேற எந்த கட்சிக்கு மாற மாட்டேன். இது தான் என்னோட தாய் வீடு.  கண்டிப்பா இங்கதான் இருப்பேன். மோடிஜியை எப்பவும் பெருந்தலைவரா தான் நான் பார்ப்பேன். அவர் சொல்லுற, கொடுக்குற திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கணும். வரும் காலங்களில் பாஜக கட்சியில் பொறுப்பில் இருந்தாலும், இல்லையென்றாலும் பாஜக கட்சிக்காகவும், இந்திய நாட்டுக்காகவும் தொடர்ந்து பனியாற்றுவேன். அண்ணாமலை என்னிடம் விளக்கம் கேட்க வேண்டும் என தனது கருத்தை நிறைவு செய்தார்.

Leave a Reply