செப்டம்பர் 1_ஆம் தேதி நடைபெற இருக்கும் TNPSC group 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறுவதற்கான வழிமுறை குறித்து டி.என்.பி.எஸ்.சி விளக்கியுள்ளது.
TNPSC group 4 பணியில் 6, 491 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளபவர்கள் tnpsc.gov.in, tnpscexams.net , tnpscexams.in என்ற இணைய தள பக்கத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்.இதன் மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட அரசுப்பணிகள் நிரப்பப்படுகின்றது.

இந்த தேர்வும் அடுத்தமாதம் (செப்டம்பர்) 1_ஆம் தேதி நடைபெறுகிறது.3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் 300 மதிப்பெண்களை கொண்டதாக இருக்கும். குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 90 எடுக்க வேண்டும். பொதுத் தமிழ், ஆங்கிலம், பொது அறிவு பாடப் பகுதிகளில் மொத்தமாக 200 கேள்விகள் கேட்கப்படும்.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சொல்லி இருப்பதாவது. தமிழக அரசின் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட அரசு பணியின் 6491 காலிப்பணியிடத்துக்கான குரூப் 4 தேர்வு வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறகின்றது. இதற்கான ஹால் டிக்கெட்டுகளை www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணையதள முகவரிகளில் தேர்வாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் தேர்வு கட்டணம் செலுத்தியதற்கான இரசீதின் நகலை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும் ஹால் டிக்கெட் தொடர்பாக ஆக.28-ஆம் தேதிக்குள் வரும் கோரிக்கைகள் மட்டுமே ஏற்கப்படும். அதற்க்கு பிறகு வரும் ஹால் டிக்கெட் தொடர்பான கோரிக்கைகள் ஏற்கப்படாது .