”TNPL கிரிக்கெட்டுக்கு சிக்கல்” சூதாட்டத்தில் சிக்கிய வீரர்கள்…. BCCI விசாரணை…!!

தமிழ்நாடு TNPL கிரிக்கெட்டில் சூதாட்ட புகாரில் சிக்கிய வீரர்களிடம் BCCI விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் முக்கிய வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிபிசியின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. அதன்பேரில் சில வீரர்களிடம் புகார் குறித்து தற்போது பிபிசியின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனை குழுவின் தலைவர் அஜித் சிங் உறுதி செய்துள்ளார். நடந்து முடிந்த டிஎன்பிஎல்_லில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் , முரளி விஜய் , தினேஷ் கார்த்திக் விஜய் சங்கர் , வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதனிடையே இந்திய வீரரும் , ஐபிஎல் குழுவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ரஞ்சி தொடரின் பயிற்சியாளரும் ஆன ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தெரியாத சிலர் தங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய சூதாட்ட புகார்களின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய நிலையில் புகாருக்கு ஆளான வீரர்கள் மீது தவறு இருந்தால் அவர்கள் தரப்பு விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என்று அஜித் சிங் தெரிவித்தார். இதனிடையே சூதாட்ட புகார் தொடர்பாக இது அணியின் வீரர்கள் இந்த மட்டுமே விசாரணை நடத்தி வரும் சூழலில் உரிமையாளர்களிடம் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை.இதற்கு முன் IPL_லில் சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை  விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது