தமிழ் தான் தெரியும்….. பிறமொழி தெரியாது…… கல்வியில் புரட்சி செய்த முதல்வர்…!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவரான காமராஜர் குறித்து தமிழகத்தில் அறியாதவர்களே இல்லை. மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய தன்னலமில்லாத ஒரே முதலமைச்சர் என்றால் பலருக்கும் ஞாபகத்தில் வருவது காமராஜர்தான். அந்த அளவிற்கு எளிமையுடன் ஆட்சிபுரிந்து மக்களுக்காக பல நல்ல திட்டங்களை உருவாக்கியவர் காமராஜர். காமராஜர் குறித்து கூற வேண்டும் என்றால், சுருக்கமாக கூறிவிடமுடியாது. அவர் செய்த நன்மைகள் பல, அவற்றில் மிகவும் குறிப்பிட்டு ஞாபகப்படுத்த வேண்டிய விஷயங்களில் ஒன்றை உங்களுடன் பகிர விரும்புகிறோம்.

இன்று ஆங்கில வழிக்கல்வி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆங்கிலத்தில் படிக்கிறோம், ஆங்கிலத்தில் பேசுகிறோம், வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிகிறோம், இந்தியாவிலேயே பன்னாட்டு நிறுவனங்களில் ஆங்கிலத்தில் உரையாடி பிற மாநிலத்தவர்களோடு  சேர்ந்து பணிபுரிந்து வருகிறோம். இப்படி மொழியை  ஒரு பிரச்சனையாக கருதாமல் நாம் முன்னேறி செல்கிறோமேயானால் அதற்கு தமிழைத் தவிர பிற மொழி தெரியாத ஒரு சாமானியன் தான் காரணம். அவர்தான் காமராஜர்.

தமிழகத்தில் குலக்கல்வி திட்டத்தை செயல்படுத்த துடித்த ராஜாஜிக்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பி அவரை  முதல்வர் பதவியில் இருந்து விளக்கவே, காமராஜருக்கு முதல்வர் பதவி அப்போது தேடிவந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் பெரும்பான்மையான ஆதரவாளர்களை பெற்று முதல்வர் பதவியை பெற்ற காமராஜர், தமிழ் தவிர பிற மொழி தெரியாது என்ற மொழிவளம் குறித்த தாழ்வு மனப்பான்மையால் பதவியை ஏற்க மறுத்தார்.

பின்னாளில் அவரே கல்வியின் அவசியத்தை உணர்ந்து ஏராளமான பள்ளிக்கூடங்களை திறந்தார். அவரது காலகட்டத்தில் மட்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருக்கும். காமராஜர் காலத்திற்குப் பிறகு கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு வேகமாக உயர்ந்தது. உதாரணத்திற்கு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, பெற்ற சில ஆண்டுகள் வரையிலும் இந்தியாவில் கல்வி பயில்வோர்களின் எண்ணிக்கை 7 சதவீதமாக இருந்தது. இதனை காமராஜர் தனது ஆட்சிக் காலத்தில் 37 சதவீதமாக உயர்த்தி காட்டினார். 

கல்வியின் அவசியத்தை உணர்த்த வேண்டுமென்றால்  படித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதற்காக அரசு சார்பில் ஏராளமான தொழில் நிறுவனங்களை நிறுவி கல்வி படித்து முடித்து வரும் நபர்களுக்கு வேலை வாய்ப்பையும் அள்ளித் தந்தார். இது போல பல நலத்திட்டங்களை கல்விக்காக செயல்படுத்தி தமிழ் சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக மாற்றியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *