வைரலாகும் பொள்ளாச்சி ஆடியோ .. யூடியூப்க்கு காவல்துறை கடிதம் …

பொள்ளாச்சி சம்பவத்தில் மற்றொரு  திருப்பம் ஏற்படுத்தும் விதமாக  புதிய ஆடியோ வெளியாகியுள்ளது இந்த ஆடியோ குறித்துக்கு விளக்கம் அளிக்க யூடியூப் நிறுவனத்திற்கு தமிழக காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது .

கோயம்புத்தூர் அருகே உள்ள பொள்ளாச்சி என்னும் பகுதியில் பெண்கள் மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்முறை சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மேலும் அந்த பாலியல் வழக்கில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்

இதனை அடுத்து நாளுக்கு நாள் இந்த வழக்குகளில் அவ்வபொழுது வீடியோக்களும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் திடீர்திடீரென வெளியாகி பரவி வந்தனர் இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்ததை அடுத்து புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலை தளங்களில் இருந்து நீக்கப்பட்டு அது  வெளியிடுவது என்பது குறைக்கப்பட்டிருந்தது

இதனை அடுத்து தற்போது இந்த பொள்ளாச்சி சம்பவத்தில் புதியதாக மற்றொரு திருப்பம் ஒன்று நடைபெற்றுள்ளது இதில் பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் பண்ணை வீட்டில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்து  பின் அங்கேயே புதைத்து கொன்றதாக  யூடியூபில் ஆடியோ ஒன்று பரவி வருகிறது இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த ஆடியோ குறித்து காவல்துறையினர் தற்பொழுது விசாரித்து வருகின்றனர் இது உண்மையா இல்லையா என்று சரியாகக் கண்டறிய முடியாததால் அதை கண்டறியும் விதமாக youtube நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை காவல்துறை அனுப்பியுள்ளது இந்த கடிதத்தில் இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஆடியோ வெளியீட்ட  நபரின்  விவரங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்று youtube நிறுவனத்திற்கு  காவல் துறை கடிதம் அனுப்பியுள்ளது மேலும் இந்த ஆடியோ ஆனது தற்போது வைரலாக பரவி வருகிறது