திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சி சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இந்த துண்டு பிரசுரங்கள் ஆரணி நகராட்சியில் உள்ள பழைய மற்றும் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள கடைகளில் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சுற்றுசூழலை காக்க பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்பட்டது. இது நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி மற்றும் சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது. இதனையடுத்து மேற்பார்வையாளர் குமார், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பாபுஜி போன்ற பலர் கலந்து கொண்ட இதில், விழிப்புணர்வு நோட்டீஸ்களை சுகாதார ஆய்வாளர் ராமசந்திரன் வழங்கினார்.