திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தேசிய பேரிடர் மீட்பு படை சார்பாக நடைபெற்றது. இதில் துணை படைத்தளபதி கெய்க்வாட் சங்கித், குழு தளபதி தீஸ்குமார், பாதுகாப்பு அதிகாரி மணிகண்டன் மற்றும் மீட்பு படைவீரர்கள் ஈடுபட்டனர்.
அப்போது நிலநடுக்கத்தால் கட்டிட ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது பற்றி ஒத்திகை நிகழ்வானது கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்கத்தால் அனைத்து வீரர்களுக்கும் சுகாதார பெட்டகம் வழங்கப்பட்ட நிலையில், மரம் நடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் மந்தாகினி, சப்-கலெக்டர் (பயிற்சி) கலைவாணி, செஞ்சிலுவைச சங்க தலைவர் இந்திரராஜன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.