ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்களில் கைதான 5பேர்… போலீஸ் விசாரணையில்…. வெளியான அதிரடி தீர்ப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 12-ந்தேதி அதிகாலையில் 2 ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி கொள்ளை சம்பவம் ஏற்பட்டது . இதே போல் போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு ஏ.டி.எம். மையத்திலும்அதில் இருந்து ரூ.72 லட்சத்து 79 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குதரத் பாஷா (43), அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்சர்உசேன் (26), அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப் (35), ஆசாத் (36) மற்றும் நிஜாமுதின் (37) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க, போளூர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

உடனே அவர்களை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது நேற்று ஒரே நாளில் விசாரணை முடித்து அவர்கள் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் 5 பேரும் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.