அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் 100 சதவீத வீட்டுவரி, தொழில் வரி உயர்வு மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சரிசெய்ய வேண்டியும், சாலைகளை சரிசெய்ய கோரியும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர அ.தி.மு.க. சார்பாக, கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் செல்வமணி தலைமை தாங்க, நகர அவைத்தலைவர் அப்துல்காதர், நகர துணைச் செயலாளர் பவுன்குமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன், பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அக்ரி.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று தி.மு.க. அரசு மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உரையாற்றினார். மேலும் இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர், ஒன்றிய செயலாளர், நகர இளைஞரணி தலைவர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மூர்த்தி, பாஞ்சாலி, ஜான் விக்டர், நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply