“கஞ்சா கடத்திய திருப்பதி தேவஸ்தான ஊழியர்”…. ஆடிப் போன போலீஸ்… அதிர வைக்கும் வீடியோ… பெரும் பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆந்திராவில் கஞ்சா கடத்தல், பயிரிடுதல், உட்கொள்ளுதல் எல்லாமே தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலின் தேவஸ்தான ஊழியர் ஒருவர் கஞ்சா கடத்தி வந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது திருப்பதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் சுற்றிக் கொண்டிருந்தார். அவரை சிறப்பு படை போலீஸ் அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தியதில் அவருடைய காலில் 15 பாக்கெட்டுகளில் 150 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்தது தெரிய வந்தது.

புனிதமான திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் தேவஸ்தான ஊழியர் ஒருவர் இப்படி கஞ்சாவை கடத்தி வந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் புனிதமான திருப்பதி கோவிலில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் இப்படி கஞ்சாவை கடத்தலாமா என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.