”திருச்சிற்றம்பலம்” பட அப்டேட்…. தனுஷுக்கு நேரமே சரியில்ல…. நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”திருச்சிற்றம்பலம்”.

தனுஷ் திருச்சிற்றம்பலம் கேரக்டர் போஸ்டர் நாளை முதல் | Dhanush  Thiruchitrambalam Character Posters Releases on June 8 Anirudh | Galatta

 

இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனையடுத்து, இந்த படத்தின் அப்டேட் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

இதற்கு காரணம் டைமிங். விக்ரம் படம் பற்றிதான் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் இன்னும் பேசிக்கொண்டு உள்ளனர். மேலும், நயன்தாரா விக்னேஷ் அவனின் திருமண பேச்சு குறித்தும் ரசிகர்கள் பேசிக்கொண்டுள்ளனர். இதனால் இந்த படத்தின் அப்டேட் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் - ரிலீஸ் தேதியை முடிவு செய்த  படக்குழு? | Dhanush s Thiruchitrambalam movie release on this date |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil ...

இதைப்பார்த்த சமூக வலைதளவாசிகள் தனுஷுக்கு நேரமே சரியில்லை என்கின்றனர். மேலும் இந்த படத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அடிக்கடி கசிந்தன. மேலும், இதற்கு படக்குழு தான் காரணமாக இருக்கக் கூடுமோ என தனுஷ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *