திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 18-ஆம் தேதி கோலாகலமாக துவங்கவுள்ளது வைகாசி விசாக திருவிழா….!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இம்மாதம் 18-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில்ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இம் மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அன்று அதிகாலை ஒரு மணியளவில் கோயில் நடை திறக்கப்படும் பின்பு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படும்.

Related image

பின்பு இரவு தங்க சப்பரத்தில் சுவாமி கிரிவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து அதிகமான பக்தர்கள் காவடி சுமந்து பாத யாத்திரையாக வருவார்கள். அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *