காலம் ரொம்ப கெட்டு போச்சு…! போலீசாரை ஏமாற்றி ரூ. 2 கோடி சுருட்டிய பாஜக நிர்வாகி…. எப்படிலாம் ஏமாத்துறாங்கப்பா…!!

உத்திர பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டத்தில் சவுகன்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாஜக நிர்வாகியான ஓம் பிரகாஷ் என்ற பிரகாஷ் மிஸ்ரா வசித்து வருகிறார். இவருக்கு சவுக்கன் பூர் என்ற பகுதியில் 0.253 மீட்டர் பரப்பளவில் நிலம் உள்ள நிலையில் இந்த நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வங்கியில் அடகு வைத்து 78 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தை விரிவு படுத்துவதற்கு நிலம் தேவைப்பட்டது.

இதை தெரிந்து கொண்ட ஓம் பிரகாஷ் தன்னுடைய நிலத்திற்கு போலி பத்திரங்களை தயார் செய்து அமேதி காவல்துறையினரிடம் ரூ. 2 கோடிக்கு நிலத்தை விற்பனை செய்துள்ளார். ஓம் பிரகாஷ் போலீசாரிடம் இருந்து ரூ. 1.97 கோடி ரூபாய் பெற்றுள்ளார். இதனையடுத்து தான் ஓம் பிரகாஷ் போலி ஆவணங்களை கொடுத்தது போலீஸாருக்கு தெரிய வந்தது. அதன் பிறகு ஓம் பிரகாஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் பாஜக நிர்வாகி ஒருவர்  போலீசாரிடமே போலி பத்திரங்களை கொடுத்து நிலத்தை விற்பனை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.