“தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பாராளுமன்ற தேர்தல், 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகியுள்ள  ஓட்டுக்கள் நாளை மே 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.இதனால் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related imageஇந்நிலையில், தேர்தல் ஆணையம், விவிபேட் ஒப்புகைச்சீட்டுகளை வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குடன் சரிபார்ப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு  சட்டமன்ற தொகுதிக்கும்  5 விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகள் சரிபார்க்கப்படும். இதனால் பாராளுமன்றத் தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி  நேரம் வரை கால தாமதம் ஏற்படும். மேலும் தபால் மூலம் போடப்பட்டுள்ள ஓட்டுகளை எண்ணி முடிப்பதற்கும் கூடுதலாக கால அவகாசம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.