தமிழகத்தில் TIKTOKகிற்கு தடை…. பேரவையில் அமைச்சர் மணிகண்டன் பேச்சு…!!

தமிழகத்தில் TIKTOK செயலியானது உறுதியாக தடை செய்யப்படுமென அமைச்சர் மணிகண்டன் பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதையடுத்து இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்ததை அடுத்து கேள்வி நேரத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன்,சமீபகாலமாக TIKTOK செயலி மூலம் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், கலாச்சார சீர்கேடு நிகழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

Image result for ban tiktok

இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்த அவர், சர்ச்சைக்குரிய வீடியோக்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு முன்னாள் ஏற்கனவே TIKTOK  செயலி  தடை செய்யப்பட்டு, பின் தடையை நீதிமன்றத்தை அணுகி திரும்ப பெற்றுவிட்டதாக தெரிவித்தார்.  மேலும் மிக விரைவில் தமிழகத்தில் TIKTOK செயலியானது உறுதியாக தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.