‘டைகர் ட்ரம்ப்’: சீனாவின் வெறுப்பும் இந்தியாவின் வளர்ச்சியும்..!!

சீனா மிகப்பெரிய நாடு என்றாலும் அது சிறிய கடற்கரையை கொண்டுள்ளது. இந்திய பெருங்கடல் மீது கண்வைக்கும் சீனாவுக்கு இந்தியாவின் வளர்ச்சி ஒரு தடையாக உள்ளது. அமெரிக்கா- இந்தியா ராணுவ கூட்டுப் பயிற்சியை (டைகர் ட்ரம்ப்) அந்நாடு விரும்பவில்லை. எனினும் இந்திய வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு.!

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்நாட்டு அதிரபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பொன்றை வெளியிட்டார். இருநாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் என்பதே அந்த அறிவிப்பு.

இந்த கூட்டு ராணுவ பயிற்சி இருதரப்புக்கும் இடையேயுள்ள ஆழமான உறவைக் குறிக்கிறது. அமெரிக்கா- இந்திய ராணுவப் படைகள் 1992ஆம் ஆண்டு முதல் (மலபார் கூட்டு ராணுவ பயிற்சி) கூட்டுப் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த கூட்டுப் பயிற்சியின் முதன்மை நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையே ஒருவருக்கொருவர் பாதுகாப்பை புரிந்துக் கொள்வதாகும். இந்திய கடற்படை எதிரிகளை தாக்கி எளிதாக அழிக்கும் பல சிறப்பு தகுதிகளைக் கொண்டது.

மூன்று பக்கங்களாலும் கடலால் சூழப்பட்ட ஆசிய துணைக் கண்டதை ஆள்கிறது. அமெரிக்க கடற்படை பசிபிக், அட்லாண்டிக் கடற்கரையில் ஒரு பிடியை கொண்டுள்ளது. இருப்பினும் அந்த கடல்களில் பயன்படுத்தப்படும் யுக்திகளை காட்டிலும், இந்திய கடற்பகுதிகளில் பயன்படுத்தப்படும் யுக்திகள் வேறுவகையானதாக இருக்கும்.

Tri service Tiger Triumph

அனைத்து கடல்களிலும் ஒரே மாதிரியான யுக்தியை கொண்டு வெற்றி பெற முடியாது. இதனை அமெரிக்கா புரிந்துக் கொண்டுள்ளது. ஆகவே இந்த கூட்டுப் பயிற்சியில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.

இந்தியாவும்- அமெரிக்காவும் கடந்த 27 ஆண்டுகளாக கூட்டுப் பயிற்சி மேற்கொள்கின்றன. இதில் ஆயிரக்கணக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர். நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் உள்ளிட்ட கருவிகள் இருநாடுகளின் ஒப்புதலின் பேரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த போர் ஒத்திகை வெற்றிகரமாக நடந்துள்ளது. இந்த ஒத்திகை பயிற்சிகள் போர் என்பதை காட்டிலும், கடல் மாசுபாட்டை தவிர்த்தல், பேரழிவுகளின் போது இடமாற்றம் உதவி, கடற்கொள்ளையர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான மலபார் (1992) என்ற கடற்படைப் பயிற்சியில் ஜப்பானும் அதிகாரப்பூர்வ பங்காளியாக மாறியது. இந்த ஒப்பந்தத்தின் அதி முக்கியத்துவத்தை உணர்ந்து ஜப்பான் இவ்வாறு நடந்துக்கொண்டது. ஜப்பான் மலபார் கூட்டுப் பயிற்சியை 2007ஆம் ஆண்டு நடத்தி முத்தரப்பு பங்காளியாக மாறியது (அதாவது இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்).

Tri service Tiger Triumph

இந்த கூட்டுப் பயிற்சியில் 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவும் இணைந்துக் கொண்டது. இதன் விளைவாக, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இராணுவ உறவுகள் வலுப்பெற்றுள்ளன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பாதுகாக்க அண்டை நாடுகள் இராணுவ ரீதியாக ஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அந்த நாடுகளை தயார் படுத்துவதற்கு தேவையான ஆயுதங்களையும் வழங்க தயாராகவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ள சீனாவும் முனைப்புக் காட்டுகிறது. எனினும் இந்தியப் பெருங்கடலைக் கண்காணிக்கும் சீனாவுக்கு, இந்தியாவின் வளர்ச்சி ஒரு தடையாக மாறியுள்ளது. சீனா பெரிய நாடு என்றாலும் அது ஒரு சிறிய கடற்கரையை கொண்டுள்ளது.

அதன் கடற்படை துருப்புக்களை இந்தியாவுடன் நெருக்கமாக அது இலங்கையின் ஹம்பாந்தோட்டா நாட்டை தேர்வு செய்தது. அந்நாடு இலங்கை மட்டுமின்றி வங்கதேசம், மியான்மர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடனும் நல்லுறவை பேணி வருகிறது.

பலூசிஸ்தானில் துறைமுகம், பொருளாதார பூங்கா என முனைப்புக் காட்டி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக சீனா மாறிவிட்டது.
இவ்வாறான தடைகளை ஏற்படுத்துவதன் மூலம், தானும் பலமாகி அமெரிக்காவின் மலபார் ஒப்பந்த கூட்டு ராணுவ பயிற்சியை முறியடிக்கலாம் என சீனா நம்புகிறது.

இந்தியாவை பொறுத்தவரை மிகப்பெரிய இயற்கை கூட்டாளியாக ரஷ்யா திகழ்கிறது. ரஷ்யாவுடன் இந்தியா பல கூட்டுப் பயிற்சிகளை நடத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவுடனும் (United States Marine Corps (USMC)) இந்தியா நெருங்கி வருகிறது.

Tri service Tiger Triumph

இந்த கூட்டு ஒப்பந்தத்துக்கு, “டைகர் ட்ரம்ப்” என அழைக்கப்படுகிறது. இதில் 1,200 வீரா்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த கூட்டுப் பயிற்சி நவம்பர் 13ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை ஆந்திராவின் காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

இந்தியா ராணுவ கூட்டுப் பயிற்சிகளை ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் நடத்தும். தற்போது அமெரிக்காவுடன் ஒரு வலிமையான கூட்டுப் பயிற்சி நடக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு உறவுகளில் இது ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *