“சாலையில் மக்களை தாக்க பாய்ந்த புலி!”.. வீடியோ எடுத்தவர் தலைதெறிக்க ஓட்டம்.. பதற வைக்கும் வீடியோ..!!

அமெரிக்க சாலையில் புலி ஒன்று மக்களை தாக்க முயன்றதால் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவில் டெக்ஸாஸ் என்ற மாகாணத்தில் இருக்கும் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் Victor Hugo Cuevas என்பவர் வங்கப்புலி ஒன்றை வளர்த்துவந்துள்ளார். இந்நிலையில் அந்த புலி ஆள் நடமாடும் சாலைக்கு வந்து மக்களை பயமுறுத்தும் வகையில் தாக்க முயன்றுள்ளது. இதனை ஒரு நபர் வீடியோ எடுத்திருக்கிறார்.

அப்போது அந்த புலி அவரை தாக்க பாய்ந்து வந்துள்ளது. இதனால் அவர் அலறியடித்துக்கொண்டு ஓடியிருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நபர் வெளியிட்டிருக்கிறார். மேலும் அங்கிருந்த சிலரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அதன் பின்பு காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதனைத்தொடர்ந்து Victor அங்கு வந்து தன் புலியை வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து Victor காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஹூஸ்டன் நகரின் சட்டத்திற்கு மாறாக புலியை வளர்த்திருக்கிறார். என்றாலும் டெக்சாஸ் மாகாணத்தில் சில விதிமுறைகளுடன் புலிகள் வளர்க்க சட்டத்தில் அனுமதியுண்டு. ஆனால் பொது இடத்தில் பயமுறுத்தும் விதத்தில் புலியை நடமாட விட்டதால், அவருக்கு 500 டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *