தியாகராஜ பாகவதருக்கு ரூ50,00,000த்தில் மணிமண்டபம்….பேரவையில் முதல்வர் பேச்சு..!!

திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு ரூ50 லட்சத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில்,

Image result for எடப்பாடி

நீர் மேலாண்மையை மேம்படுத்த மாவட்டங்கள் வாரியாக ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்துக்காக மத்திய அரசுடன் மாநில அரசு தொடர்ந்து செயல்படுகிறது.  காவேரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க நடந்தாய் வாழி காவேரி திட்டம் நிறைவேற்றப்படும். திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு 50 லட்சத்தில் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.