“துணிவு” திரைப்படத்தின்….. செம மாஸ்ஸான 3 பாடல்கள்…. அடுத்தடுத்து வெளியீடு….!!!

நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படத்தின் மூன்று பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

அஜித், போனி கபூர், எச்.வினோத் கூட்டணியில் “துணிவு” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் பொங்கலையொட்டி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது இந்த திரைப்படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தான் “துணிவு” திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் ஹீரோயினியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் தவிர வேற எதுவும் புதிதாக வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் இப்படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது “துணிவு” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் குறித்து தகவல் வெளியாக்கியுள்ளது. அதாவது சில்லா சில்லா, காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டர் என மூன்று பாடல்களின் பெயர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .