துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ட்வீட்..!!

தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்திற் கொண்டே தனது முடிவுகள் இருக்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.  பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.

தமிழகசட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முதலமைச்சர் எடப்பாடி என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இன்னிலையில் வருகிற 7-ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழுக் கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அறிவித்திருந்தார்.

இதனிடையே அதிமுக கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம்  தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 2 தினங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தமிழக மக்கள் மற்றும் அதிமுக கழக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன.

இனியும் அவ்வாறு இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது..! எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *