துக்க நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நகரில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருக்கின்றார். இதில் கவிதா எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கவிதாவின் தந்தை இறந்து விட்டதால் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கணவன்-மனைவி இருவரும் கடந்த 7-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து வடிவேல் மீண்டும் தனது வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து வடிவேல் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *