கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல்…. வியாபாரிக்கு நடந்த கொடுமை…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் வியாபாரியான தன பிரகாஷ் வசித்து வருகிறார். இவர் தனது காரில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர். மேலும் காரை உரசுவது போல வந்தபோது தன பிரகாஷ் அவரை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த 2 வாலிபர்களும் தன பிரகாஷிற்கு கொலை மிரட்டல் விடுத்து கார் கண்ணாடியை உடைத்துள்ளனர்.

எனவே தன பிரகாஷ் அருகில் உள்ள கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பிரபு, அஜித் குமார் ஆகிய 2 பேர் தான் தன பிரகாஷ் இருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *