இதுல விஷம் இருக்குமோ….? உயிரிழந்த 3 குழந்தைகள்…. பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்….!!

தான்சானியா நாட்டில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்ட மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தான்சானியா நாட்டில் உள்ள பெம்பா என்ற தீவு பகுதியை சேர்ந்த சிலர் கடல் ஆமைக்கறியை உணவாக சாப்பிட்டுள்ளனர். அதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 22 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது இரண்டு குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த கடல் ஆமைக்கறியில் விஷம் ஏதாவது இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் பரிசோதனைக்காக ஆமைக்கறியின் மாதிரிகளை சேகரித்து அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே கடந்த காலங்களில் பெம்பா தீவு பகுதியில் ஆமைக்கறியை உணவாக உண்டு பலர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *