“எனக்கு பயமா இருக்கு” மனைவியின் பரபரப்பு புகார்… கைது செய்யப்பட்ட கணவர்…!!

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் மனோஜ்குமார் என்ற ஓட்டுநர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவபாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜீவபாரதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பெற்றோர் வீட்டில் உள்ள தனது மனைவியை பார்க்க சென்ற மனோஜ்குமார் மீண்டும் தகராறு செய்துள்ளார்.

அப்போது கோபத்தில் மனோஜ்குமார் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்த ஜீவபாரதி நெகமம் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக மனோஜ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.