
இந்நிலையில் சென்னை அடுத்துள்ள கீழ்ப்பாக்கம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் ஜெகதீஸ் என்ற நபரிடம் 40 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து பூங்கா நகர் பகுதியை சேர்ந்த மெய்லி என்பவரிடம் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 15 பவுன் நகை,ரூபாய் 1 1/2 லட்சம் மதிப்புள்ள பணம் கைப்பற்றினர். இவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னை அருகே சூளைமேடு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 1 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள பணம் பிடிபட்டது. விசாரணை நடத்தியதில் அந்த பணம் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரிய வந்தது.இச் சம்பவத்தை பற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் அவர்கள் உரிய ஆவணங்களை காட்டி யதை அடுத்து அரை மணி நேரத்துக்கு பிறகு அந்த பணத்தை காவல்துறையினர் திருப்பி அளித்தனர்.