“தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனம்”…. இன்று(ஜன,.27) முதல் படத்தின் அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இப்போது IPL போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் தோனி, பல துறைகளிலும் கால்பதித்து வருகிறார். சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியின் உரிமை, ஓட்டல், உடற் பயிற்சிக் கூடம், இயற்கை விவசாயம் என பல தொழில்களில் தோனி முனைப்பு காட்டி வருகிறார். அதனடிப்படையில் “தோனி எண்டர்டென்மெண்ட்” எனும் பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை அவர் துவங்கி உள்ளார்.

முன்பே தி ரோர் ஆஃப் தி லயன் எனும் ஆவணப் படத்தை தயாரித்திருக்கும் இந்த நிறுவனம், அடுத்ததாக ஒரு நேரடி தமிழ் படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தோனியின் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கவுள்ள முதல் படத்தின் அப்டேட் இன்று(ஜன,.27) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இன்று நண்கல் 12 மணிக்கு படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.