பொங்கல் கொண்டாட சென்ற குடும்பத்தினர்… நோட்டமிட்டு கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்… ஈரோட்டில் பரபரப்பு….!!

தொழிலதிபர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூளை காவிரி நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்- சிவகாமி. இத்தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். செந்தில்குமார் துணி பதனிடும் ஆலை நடத்தி வருகிறார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி நகரில் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறியுள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக செந்தில்குமார்  தனது குடும்பத்தினருடன் கடந்த 13ஆம் தேதி இரவு எழுமாத்தூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார்.

பண்டிகையை கொண்டாடி விட்டு நேற்று காலை அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பிய போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் தங்க நகையும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கொள்ளை போனது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கொள்ளை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *