கணவன்-மனைவி இடையே தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிரம் மங்கலம் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பழனி குடித்துவிட்டு லலிதாவிடம் தகராறில் ஈடுபட்டதினால் அவர் கோபத்தில் தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் இரவு நேரத்தில் லலிதா தனது வீட்டிற்கு வந்து திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார்.

இதனை அடுத்து அதிகாலையில் லலிதா எழுந்து பார்க்கும் போது பழனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு வசித்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *