தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்…. 150 பெண்கள் உள்பட 550 பேர் கைது…!!!

ஏ.ஐ.டி.யு.சி. நாமக்கல் மாவட்ட குழு சார்பில் திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அருகில் சாலைமறியல் போராட்டம்  நடைபெற்றது. இந்த போராட்டம் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் செல்வராஜ் தலைமையில் 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நடத்தப்பட்டது. இதற்கு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயராமன், மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு செய்திபிரிவு செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மறியல் போராட்டத்தில் அரசு பணிகளில் 240 நாட்கள் பணிபுரிந்த அனைவரைக்கும் பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் ரூ.21 ஆயிரத்துக்கும் குறைவான சம்பளம் வழங்க வேண்டும். மேலும் தொழிலாளர் நல வாரியங்களில் ஓய்வூதியமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இதனையடுத்து நிலுவையில் உள்ள தொழிலாளர் நலவாரிய ஓய்வூதிய தொகையும் உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 550 பேரை போலீசார் கைது செய்தனர். இதில்
150 பெண்களும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply