“சீனா”வின் திட்டம் நிறைவேறுமா…? ஒலிம்பிற்கு வந்த சோதனை…. காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!

சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் காரணமாக அந்நாட்டின் தலைநகரில் திட்டமிடப்பட்டுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சீனாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 206 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனாவின் புதிய பாதிப்புகளின் படி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,077 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் தற்போது மிக வேகமாக பரவி வரும் கொரோனாவால் அடுத்தாண்டில் திட்டமிடப்பட்டுள்ள குளிர்காலப் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்த குளிர்கால போட்டிகளை ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் சீனா மனித உரிமை அத்துமீறலில் ஈடுபடுவதாகக் கூறி அதனை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.