“இதுக்கு பேரு தான் அதிர்ஷ்டங்கிறது”… வேடிக்கை பார்க்க போனவருக்கு… அடித்தது ஜாக்பாட்..!!

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே முதன்மையாக கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. மற்ற சிலர் சுற்றி பார்ப்பது மட்டும்தான் வாழ்க்கை என ஆர்வத்தை அதில் காட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர் பறவைகளை வேடிக்கை பார்க்க சென்ற போது எதிர்பாராத வகையில் ஒரு புதையல் கிடைத்தது. பிரிட்டனை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கு அடியில் கிடக்கும் உலோக பொருட்களை ஆராய்ந்து வரும் வழக்கத்தை கொண்டவர்.

இயற்கையில் ஆர்வம் கொண்ட அவருக்கு பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.  அப்படி அவர் பறவை சண்டையிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள வயலில் ஏதோ பளிச்சிடும் ஒளியுடன் ஒரு பொருள் தென்பட்டது. அவர் டிராக்டர் மூலம் பூமிக்கடியில் இருக்கும் உலோகப் பொருட்களை தேடி எடுக்கும் வழக்கம் கொண்டவர் என்பதால் அந்த ஒளி தங்க புதையல் என்பது உறுதியாகிறது. இந்நிலையில் அதில் தங்கம் இருப்பது அவருக்கு தெரிய வந்துள்ளது.

அதனை உறுதிப்படுத்திய அவர் உடனே வீட்டுக்கு சென்று இரண்டு பெரிய பைகளை எடுத்துக்கொண்டு அந்த வயலுக்கு வந்துள்ளார். அப்போது ஓரிடத்தில் அவருடைய மெட்டல் டிடெக்டர் பலத்த ஒலி எழுப்பியுள்ளது.அந்த இடத்தில் வளையல் போல ஏதோ ஒன்று இருந்தது. ஆனால் அது வளையல் அல்ல எடுத்து பார்த்தால் ஒரு பானையின் வாய்பகுதியாக இருந்துள்ளது. இதனால் அவர் பெருமிதம் அடைந்துள்ளார்.இதனால் அவர் மகிழ்ச்சி அடைந்து அதனை எடுத்துச் சென்றார்.