இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய 370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.மேலும் இந்த பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக மாற்ற பாகிஸ்தான் முயன்று வருகின்றது. இதற்க்கு சீனா ஆதரவாக செயல்படுகின்றது.

இந்நிலையில் அரியானாவில் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசுகையில் , ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது வளர்ச்சிக்கானது. இந்தியா தவறு செய்து விட்டதாக பாகிஸ்தான் கூறிவருகின்றது, பல்வேறு நாடுகளிடம் ஆதரவும் கேட்கின்றது.பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தினால்இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் அதுவும் இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி தான் பேசுவோம் காஷ்மீர் பிரச்சனையை அல்ல என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.