அஜித்தின் இந்த மாஸ் படம்…. பிரபல இயக்குனருக்கு ரொம்ப பிடிக்குமாம்… அவரே சொன்ன சுவாரசிய தகவல்…!!!

அஜித் நடித்த இந்த படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் பிரபல இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கரா அவர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் இயக்கத்தில் உருவான இறுதிச்சுற்று திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. மேலும் இப்படத்தில் நடித்த மாதவன் ரித்திகா ஆகியோரும் பல விருதுகளை வென்றனர்.

இதை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்ததாக உருவான சூரரை போற்று திரைப்படமும் அவரை மாபெரும் உச்சத்திற்கே கொண்டு சென்றது. மேலும் அவர் இயக்கத்தில் புத்தம் புது காலை, பாவக்கதைகள் ஆகிய வெப் சீரிஸ்களும் உருவாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்ததாக யார் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சுதா சுதா கொங்கரா அஜித் நடித்த படத்திலேயே எனக்கு மங்காத்தா திரைப்படம் மிகவும் பிடித்தமான ஒன்று என கூறியுள்ளார். மேலும் படத்தைப் பார்த்துவிட்டு இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு இரண்டு குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்கள். இத்தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை ஷேர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *