நான் சொல்ல வந்தது இதுதான்.. விவாகரத்துனு செய்தி போட்டுட்டாங்க.. விஷ்ணு விஷால் காட்டம்..!!!

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் போட்ட ஒரு பதிவு அதிகம் வைராலனது. அதில், நான் மறுபடியும் முயற்சி செய்தேன். மறுபடியும் தோற்றுவிட்டேன். நான் பாடம் கற்றுக் கொண்டேன். போன முறை தோல்வி அல்ல என் தவறும் அல்ல. அது துரோகம் என ட்விட் செய்திருந்தை பார்த்த நெட்டிசன்கள் அவரது இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்கிறாரா என கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கின்றார். நான் ப்ரொபஷனல் விஷயம் பற்றி தான் குறிப்பிட்டேன். வாழ்க்கை பற்றி பேசவில்லை என குறிப்பிட்டார். ஒருவருக்கு நாம் கொடுக்கும் பெரிய கிப்ட் டிரஸ்ட் என்பதுதான். ஆனால் தோற்று விட்டால் நம்மையே குறை சொல்லிக் கொள்கிறோம். இதை தான் நான் சொல்ல வந்தேன் என விளக்கியுள்ளார்.