இதுதான் உயர்சாதி அரசியல்… திருமாவளவன் ஆவேசம்…!!!

மனுதர்ம விவகாரத்தில் திருமாவளவன் இந்து பெண்களுக்கு எதிராகப் பேசினார் என்று பொங்கிய எவனும் PSBB பள்ளியில் பாதிக்கப்பட்ட இந்து பெண்களுக்காக குரல் கொடுக்க வரமாட்டான் என்று திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பின்னர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் புழல் சிறையில் அடைக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நேற்று  தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றை பதித்துள்ளார். அதில் மனுதர்ம விவகாரத்தில் திருமாவளவன் இந்து பெண்களுக்கு எதிராகப் பேசினார் என்று பொங்கிய எவனும் PSBB பள்ளியில் பாதிக்கப்பட்ட இந்து பெண்களுக்காக குரல் கொடுக்க வரமாட்டான் என்று திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். மேலும் பள்ளியில் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு நீதி கிடைக்கவும், பிற சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சிறப்பு புலனாய்வு விசாரணைக்க ஆணையிடுமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *