பிரகாஷ்ராஜால் ”விருமன்” படக்குழுவிற்கு ஏற்பட்ட சிக்கல்…. காரணம் இதுதான்…. வெளியான தகவல்….!!

விருமன் திரைப்பட படப்பிடிப்பிற்கு பிரகாஷ் ராஜ் வரவில்லையெனில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, முத்தையா இயக்கத்தில் ”விருமன்”என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்தப்படத்தில் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாக இருக்கிறார்.

ஏற்கனவே,கார்த்தி முத்தையா கூட்டணியில் உருவான கொம்பன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் ‘விருமன்’ படத்தில் கார்த்தியின் தந்தையாக நடிக்கிறார்.மேலும், இவர் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.

விருமன் படத்துக்கும் இந்த பிரச்சனையா? என்ன செய்யப் போகிறார் சூர்யா!

அந்த வேலையின் காரணத்தினால் விருமன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள கடைசி நேரத்தில் வரவில்லை என கூறப்பட்டது. இதனால் இப்படக்குழு கதாநாயகி மற்றும் கதாநாயகன் வைத்து சிறு காட்சிகளை எடுத்துவிட்டு சென்றனர். 20ஆம் தேதி படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜ்  கலந்து கொள்ளவில்லை என்றால் வேறொருவரை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *